ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகபடுத்திய ராம் குமார் – காணொளி உள்ளே

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரை ராச்சசன் படம் சம்பாதித்திருக்கிறது. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையரங்கில் ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று ரிலீஸ் செய்தாலும் பிறகு படத்தின் விமர்சனங்கள் நல்லவிதமாக வந்தபின்னர், 4 காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்த நிலையில், இன்றைக்கு வரை, ரசிகர்களிடமும் திரையுலகத்தினரிடம் இருக்கும் கேள்வி, ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் சைக்கோ வில்லனாக நடித்த நடிகர் யார் என்பதுதான். அதற்கான பதிலை தெரிவிக்க, ராட்சசன் தயாரிப்பாளர் ஒரு விழாவாகவே நடத்தியிருக்கிறார். ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது.

கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் நடித்த அவரின் பெயர் சரவணன். அந்த கதாபாத்திரத்தின் இளம் பருவ வேடம் போட்டு நடித்தவர், யாசர். இவர்களை அறிமுக படுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news