Inandoutcinema - Tamil cinema news

ராகுல் காந்தியுடன் இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு. குழப்பத்தில் கோடம்பாக்கம்

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பா.ரஞ்சித் ஆகும். அடுத்தாக இயக்கிய மெட்ராஸ் படம் அனைவரயும் திரும்பிப்பார்க்க வைத்தது. நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய இந்த படம் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திகொண்டுபோனது. அடுத்தடுத்து ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு பிரம்மாண்ட படங்களை எடுத்தார். இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக லாபம் ஈட்டியதாக தயாரிப்பு தரப்பு கூறுகிறது.

இவரது நான்கு படங்களிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை பேசியிருப்பார் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்து பேசி உள்ளார்கள். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில் சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன். அரசியல், சினிமா மற்றும் சமுதாயம் தொடர்பாக இருவருடன் விவாதித்தேன். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என கூறி உள்ளார். ஆனால் பா.ரஞ்சித் சந்தித்ததற்கான காரணம் என்னவென்று கூறவியில்லை. ராகுல், ரஞ்சித் சந்திப்பை, சிலர் அரசியல் உள்நோக்கம்கொண்டது என கூறிவருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news