September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

காலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில், இந்தித் தயாரிப்பு நிறுவனம் நமா பிக்சர்ஸ், ரஞ்சித்தின் பணியைக் கண்டு வியந்துள்ளது. அதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் படம் தயாரிப்பதற்கு விரும்பியுள்ளது.

நமா பிக்சர்ஸ் தயாரிப்பில், உண்மைக் கதையை மையமாகக் கொண்ட வரலாற்று பின்னணியில் இந்தித் திரைப்படம் ஒன்றை ரஞ்சித் இயக்கவுள்ளார். அந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சித் இயக்கவிருக்கும் இந்த படம் பிரமாண்டமான வரலாற்று படமாக இருக்கும் என கூறபடுகிறது. ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் விவரங்கள் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news