இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் தோற்றம் முற்றிலும் வேறானது – இயக்குனர் நவீன்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் திமிரு புடிச்சவன். இந்த படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு மற்றும் சில முக்கியமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார். அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் போன்ற ஒரு அசாதாரணமான கூட்டணியை பார்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகி உள்ளது. இன்னிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் நவீன் கூறியதாவது : தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம்.

மேலும், விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர் தான் என அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர் தோற்றம் இருக்கும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல, அவர் கதாபாத்திரம் இந்த மாதிரியான மாற்றங்களை கோரியது. எனவே, பல்வேறு தோற்றங்களை பரிசீலித்து, இறுதியாக சரியான ஒன்றைக் கண்டுபிடித்தோம்.

கதை அல்லது கதாபாத்திரங்களை பற்றி எதையும் இப்போது வெளிப்படுத்துவது சரியாக இருக்காது. ஆனால், அக்னி சிறகுகள் எங்கள் முந்தைய திரைப்படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்வேன் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news