சற்றுமுன் மோகன் ராஜா வெளியிட்ட வீடியோ

இயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் inandout cinema சேனல்க்கு பிரத்யேகமாக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது : ஹாய் பிரெண்ட்ஸ் எனது உதவி இயக்குனராக பணிபுரிந்த நாகா, ஒரு குறும்படம் இயக்கியுள்ளார்.

அந்த குறும் படத்தின் தலைப்பு “சிறிய இடைவெளிக்குப் பின்” என வைக்கப்பட்டுள்ளது. அதில் நகைச்சுவை நடிகர் சதிஷ், முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் எனது தம்பி மாதிரி. நடிகர் சதிஷ் நடிப்பில் எனது உதவி இயக்குனர் நாகா இயக்கத்தில் உருவாகியிருக்கும் “சிறிய இடைவேளைக்குப் பின்” என்ற குறும் படத்தின் முதல் புகைப்படத்தை [first look] எனது ட்விட்டர் பக்கத்தில் நான் வெளியிடுகிறேன்.

நாகா என்னோட நம்பிக்கையான உதவி இயக்குனர்களில் ஒருவர். அவரது இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த குறும்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். சிறிய இடைவேளைக்குப் பின் குறும்படம் “inandout cinema” youtube channel-லில் வெளியாகவிருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த குறும்படத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி என இயக்குனர் மோகன் ராஜா கூறியுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டுள்ள இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news