September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: இயக்குனர் மோகன் ராஜா முதல் முறையாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் “தனி ஒருவன்” கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மோகன் ராஜா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், “தனி ஒருவன்” படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா நேற்று இரவு ஒரு முக்கிய தகவலை அறிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த காணொலியில் இயக்குனர் மோகன்ராஜா “தனி ஒருவன்” வெற்றியை  தொடர்ந்து விரைவில் அதன் இரண்டாம் பாகமான “தனி ஒருவன் -2” எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதிலும், அவரது தம்பியான நடிகர் ஜெயம் ரவியே கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும், இயக்குனர் மோகன் ராஜா “தனி ஒருவன்-2” படத்துக்கான ஸ்கிரிப்டை ஏற்கெனவே தொடங்கி விட்டார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் படபிடிப்புகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news