Inandoutcinema - Tamil cinema news

அனைத்து மக்களும் ரசிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் – கண்ணன்

இமைக்கா நொடிகள் படத்தில் கிடைத்த பிரமாதமான வரவேற்புக்கு பிறகு, அதர்வாவின் நடிப்பில் பூமராங் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சதீஷ் போன்ற திறமையான நடிகர்களுடன், ரதன் இசையும், பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்னிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் கூறியதாவது :

பூமராங்கின் கதை என் மனதில் எழுந்த உடன் அதை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என் மனதில் உடனடியாக எழுந்தது. சில சமயங்களில் உலகளாவிய கதை, யு/ஏ சான்றிதழால் அனைவரையும் சென்று சேர முடியாமல் போக அதிக சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

எனவே இந்த உறுதியான முடிவை பூமராங் படத்தின் திரைக்கதை எழுதும்போதும், படப்பிடிப்பின் போதும் என் மனதில் நினைத்துக்கொண்டேன். தற்போது இந்த படத்துக்கு யு சான்றிதல் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news