September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

இளம் இசையமைப்பாளரை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் கண்ணன். விவரம் உள்ளே

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் பூமராங் ஆகும். இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ரதன் இசையமைத்திருப்பது படக்குழுவை தன்னம்பிக்கையோடு வைத்திருக்கிறது. இப்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

 

அர்ஜுன் ரெட்டி ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் கண்ணன் கூறியதாவது : மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்.

தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த ‘பூமராங்’ குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news