எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய கே.பாக்யராஜ் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார்.

முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் பட தயாரிப்பு நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் செங்கோல் கதாசிரியர் வருண் ராஜேந்திரனின் பெயர் போடவும் பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததால், பிரச்சினை சுமுகமாக முடிந்தது. இன்னிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது பற்றி நடிகர் பாக்யராஜ் கூறியதாவது : சர்க்கார் படம் விவகாரம் குறித்து இயக்குனர் முருகதாஸிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் என்னோடன் உடன்படவில்லை. எனக்கு நேர்ந்த அசௌரியங்கள் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை பற்றி சங்க நலன் கருதி வெளியில் சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார். நடிகர் பாக்கியராஜின் இந்த முடிவு, திரையுலகினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news