பிரபல இயக்குனருடன் 6வது முறையாக இணையும் நடிகர் சூரியா – விவரம்

நடிகர் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் சாமி 2 ஆகும். இயக்குனர் ஹரி எழுதி இயக்கிய இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் என்பவரால் தமீன்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபு, பாபி சிம்ஹா மற்றும் சூரி ஆகியோருடன் பெண் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தினுடைய ஒரு தொடர்ச்சியாகும். இந்த படத்தின் முதல் தோற்றம் மோஷன் போஸ்டர் மே மாதம் 17ம் தேதி 2018 இல் வெளியானது. சாமி 2 படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விக்ரம் இந்த படத்தில் அதிரடியான காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இன்னிலையில் சாமி 2 படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூர்யாவை முன்னணி பாத்திரத்தில் நடிக்க இருப்பதை ஹரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த படம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் தொடரப் போவதில்லை என ஹரி கூறியுள்ளார். வேல் போன்ற ஒரு குடும்ப பாங்கான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் சூரியா பெயரிடப்படாத கே.வி. ஆனந்த் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news