துப்பாக்கி முனை படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ்

இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனராக பணியாற்றிய தினேஷ் செல்வராஜ் என்பவர் துப்பாக்கி முனை என்ற திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தினை வி.கிரேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

துப்பாக்கி முனையின் முக்கய கதாபாத்திரங்களில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், மிர்ச்சி ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்னிலையில் இது பற்றி இயக்குனர் தினேஷ் செல்வராஜ் கூறியதாவது : சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது. ஆனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசதந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் [விக்ரம் பிரபு] கருத்து.

தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன.? பெற்றது என்ன.? என்பதே இந்த துப்பாக்கி முனையின் கதை சுருக்கம். மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை கதாபத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தின் கதையும், விக்ரம்பிரபுவின் வித்யாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம் எனவும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news