விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இவர்தான் கதாநாயகியா ? – விவரம் உள்ளே

நடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் பல நாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 120 கோடி ரூபாய் பொருட்செல்வில் உருவான இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அட்லியின் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் திரைப்படங்கள் வணீக ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் பெற்றது.

மெர்சல் திரைப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார் அட்லி. அடுத்ததாக ஏஜிஎஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் விஜய்யின் 63 வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் ஏகப்பட்ட நிபந்தனைகளை, இயக்குனர் அட்லிக்கு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் அட்லி கூறியதாவது : மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைவது அளவிட முடியாத மகிழ்வைத் தருகிறது. மேலும், இப்படத்திற்கு மிக ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாகவும், இதற்கு முந்தைய அட்லி படங்களில் விஜய்யை பார்த்ததைவிட இரண்டு மடங்கு மாஸான விஜய்யைப் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

விஜய் பட ஷூட்டிங் ஆரம்பமாக உள்ள அந்த நாளுக்காக காத்திருப்பதாகக் கூறும் அட்லி, தற்போது மற்ற நடிகர்களை தேர்வு செய்வதில் பிசியாக இருக்கிறார். இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பரத் எனும் நான் திரைப்படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த கியாரா அத்வானி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news