வெற்றிமாறனால் மட்டும்தான் இதை செய்ய முடியும் என கூறிய இயக்குனர் அமீர்

நடிகர், இயக்குனர், பாடகர் பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக தன்மைகொண்டவர் நடிகர் தனுஷ் ஆகும். இவரது நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட வருடங்களாக உருவாகியுள்ள இந்த படத்தினை நடிகர் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றுது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ், வெற்றிமாறன் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் கூறியதாவது : பொதுவாக ஒரு படம் இணைந்து பணியாற்றிய பிறகு, கதாநாயகன் மற்றும் இயக்குனருக்கிடையே பொறாமை உண்டாகிறது. ஆனால் நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இத்தனை படங்கள் இணைத்து பணியாற்றுவது ஆச்சர்யமான விடயம்.

வடசென்னை படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறனால் மட்டும்தான் தனுஷை இன்னொரு பரிமாணத்தில் காட்டமுடியும் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

இதன் மூலம் பொல்லாதாவன், ஆடுகளம் மற்றும் வடசென்னை படங்களுக்கு பிறகு மீண்டும் நான்காவது முறையாக தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பினையும் விரைவில் துவங்கவுள்ளனர். இந்த கூட்டணியில் வடசென்னை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நானும் இணைந்துள்ளதாக இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news