Inandoutcinema - Tamil cinema news

மனைவிக்கு தெரிந்தே ஒரு பெண்ணை காதலிக்கும் இயக்குனர் அமீர். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும். இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், அமீர், ராம், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் இயக்குனர் அமீர் பேசும்போது, தொகுப்பாளர்கள் உங்கள் முதல் காதல் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு இயக்குனர் அமீர் கூறியதாவது : முதல் காதல் எப்போதோ நடந்தது. அவர்கள் எல்லாம் இப்போ கிழவி ஆகி இருப்பார்கள் அதை கேட்பதால் என்ன பயன்.

கடைசி காதல் பற்றியாவது கேட்கலாம். நான் இப்போதும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அது பற்றி என் மனைவிக்கும் தெரியும் என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news