வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தல பட இயக்குனர் – இது போதும் சாமி!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.  இதற்கிடையில், விஸ்வாசம் படத்தின் 2ம் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி தல ரசிகர்களிடமே எதிர்மறையன விமர்சனங்களை பெற்றது.

Viswasam second look poster

இதனால், அடுத்த உருப்படியான அப்டேட்டுக்காக தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனேகமாக, இந்த மாத இறுதியில் படத்தின் டீசர் அல்லது சிங்கிள் டிராக் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில், விஸ்வாசம் படம் முடிந்த கையுடன் வினோத் இயக்கும் புதிய படத்தில் தல அஜித் நடிக்க ஒப்புகொண்டுள்ளார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இப்படம் இதியில் வெளியான “பிங்க்” படத்தின் டப்பிங் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்தியில் இந்த படத்தில் அமிதாப்பச்சன் வயதான வக்கீலாக நடித்திருப்பார். இந்த கதாபார்த்திரத்தில் தான் தல நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படம் இந்தியில் வெற்றிபெற்றாலும் தமிழுக்கு செட் ஆகுமா என்று ஒரு கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. மேலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகமலே இருந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் வினோத் இப்படம் “பிங்க்” படத்தின் ரீமேக் அல்ல என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் “இதத்தான் எதிர்பார்த்தோம்” ரிமேக் எல்லாம் வேண்டாம் புதுசாவே எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news