ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கும் லிங்கு சாமி – திவாகரன் மகன் ஜெயானந்த் அறிவிப்பு

சென்னை: மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை லிங்கு சாமி இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.  75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் திடீரென மரணம் அடைந்ததால்  அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவரது இறப்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இன்று வரை ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில், ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக இயக்குனர்கள் ராம்கோபால் வர்மா, பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்பட பலர் தெரிவித்து வந்தனர். கடைசியாக இயக்குனர் மின்ஸ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷினி என்பவர் ஜெயலலிதா வாழ்க்கையை “The Iorn Lady” என்ற தலைப்பில் திரைப்படமாக எடுப்பதாக அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ஜெயலலிதா கதாபார்த்திரத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். அதேபோன்று சசிகலா கதாபாத்திரத்தில் வரலட்சுமியை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலா சகோதரரான திவாகரனின் மகன் ஜெயானந்த் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மூகநூல் பதிவில்; ‘அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குனர் எனது நண்பர் திரு.லிங்கு சாமி அவர்களால் படமாக்கப்படும். இதில், நடராஜன் மற்றும் சின்னமாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்.. என்று’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்  மறைந்த சசிகலா கணவர் நடராஜனின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடுவது போல #natarajan_76_birthday என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த தகவல் குறித்து லிங்குசாமி தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news