வைரலாகும் தனுஷின் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர்!

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான். இந்த கூட்டணியில் முதன்முதலில் வெளியான படம் பொல்லாதவன். ஆனால் அதற்கு முன்னரே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த ‘தேசிய நெடுஞ்சாலை’ எனும் திரைப்படம் கைவிடப்பட்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது.

தேசிய நெடுஞ்சாலை படத்தின் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த ‘தேசிய நெடுஞ்சாலை’ படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிமாறன் என்பவர் சித்தார்த்தை வைத்து ‘உதயம் என்.ஹெச்.4 என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news