தனுஷ் 44 படத்தின் புதிய அப்டேட்..

நடிகர் தனுஷ் இப்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய சுருளி என்ற படம் ரிலிஸுக்குத் தயாராகியுள்ளது. மாரி செல்வராஜ் படத்துக்குப் பின் தனுஷ் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதற்குப் பிறகு சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 44 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை தனுஷே எழுதுகிறார். இன்னும் யார் இயக்குனர் என்பது முடிவு செய்யப்படாத நிலையில் இப்போது படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news