நடிகர் தனுஷ் தற்போது மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனே இப்பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் வித்யா பிரதீப் என்ற மற்றொரு நடிகையும் நடிக்கிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ், வில்லனாக நடிக்கும் டொவினோ தாமஸ் உடன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்பாராத நேரத்தில் தனுஷ் தடுமாறி கீழே விழுந்ததால் அவரது வலது கால் முட்டியிலும் இடது கையிலும் காயங்கள் மற்றும் சில சிராய்ப்புகளும் ஏற்பட்டன.
இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் தமக்கு பெரிய அடி ஏதும் இல்லை, நலமாக உள்ளேன் என்று டுவிட் செய்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் அவருடன் நடிக்கும் சக நடிகரான கிருஷ்ணா தனது படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது என சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.