September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் – இயக்குனர் செல்வராகவன்

சென்னை: நடிகர் தனுஷ் கடந்த 28ம் தேதி அவரின் பிறந்தநாளை சென்னையில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

நடிகர் தனுஷுக்கு இந்த ஆண்டு முதல் பாதியில் படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் “என்னை நோக்கிபாயும் தோட்டா”, வெற்றி மாறன் இயக்கத்தில் “வடசென்னை”, பாலாஜி மொகனின் “மாரி-2” என வருடத்தின் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து பெரிய படங்கள் வரிசைக்கட்டி ரிலீசுக்கு காத்திருக்கிறது.

இது தவிர தயாரிப்பு பணிகள், பி.பாண்டி-2 உள்ளிட்ட பணிகளில் மனிதர் படு பிசியாக உள்ளார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி நடிகர் தனுஷ் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். தனுஷ் தனது எல்லா பிறந்தநாளுக்கும் அவரது குடும்த்தினரை சந்திப்பது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.  அதில் அவர், தனுது இரண்டு சகோதரிகள், அண்ணன் செல்வராகவன், அப்பா கஸ்தூரிராஜா மற்றும் தாயாருடன் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் டிரண்டாகி வருகிறது.

மேலும் தனுஷ், அண்ணன் செல்வராகவனின் மகனுடன் விலையாடும் படத்தையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், செல்வராகவன் என் வாழ்க்கையில்  இரண்டு சிறுவர்கள் எனது மகன் மற்றும் எனது தம்பி என்று குறிப்பிட்டுள்ளார். இதுவும் டிரெண்டாகி வருகிறது.

பொதுவாக நடிகர்களின் பிறந்தநாளை அவரது திருவிழா போல கொண்டாடுவார்கள், சமுக வலைத்தளங்களி காமன் டீபி, ஹேஷ் டேக் போட்டு இந்திய அளவில், உலக அளவில் டிரெண்டாக்கி விடுவார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருவதால் பலருக்கும் தனுஷின் பிறந்தநாள் வந்து சென்றதே தெரியவில்லைல்.  இந்த நிலையில், தான் தனுஷின் பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news