மாறி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட சோகம். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தற்போது அவர் ஏற்கனவே நடித்திருந்த மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனே இப்பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். மேலும் வித்யா பிரதீப் என்ற மற்றொரு நடிகையும் நடிக்கிறார். இந்நிலையில் தனுஷ், வில்லனாக நடிக்கும் டொவினோ தாமஸ் உடன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்பாராத நேரத்தில் தனுஷ் தடுமாறி கீழே விழுந்ததால் அவரது வலது கால் முட்டியிலும் இடது கையிலும் காயங்கள் மற்றும் சில சிராய்ப்புகளும் ஏற்பட்டன. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் தமக்கு பெரிய அடி ஏதும் இல்லை, நலமாக உள்ளேன் என்று டுவிட் செய்துள்ளார். இந்த ட்விட்டருக்கு பிறகு அவரது ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news