Inandoutcinema - Tamil cinema news

நடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு – விவரம் உள்ளே

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் இளசுகள் மத்தியில் ஹிட் அடித்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது.

இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2, வாடா சென்னை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகிவரும் நிலையில் அவர், இயக்கவிருக்கும் அடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இதில் தனுஷ், எஸ்ஜே.சூர்யா, நாகார்ஜுன், சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சீன் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news