தனுஷின் “மாரி-2”, சிவகார்த்திகேயனின் “கனா” – இரண்டில் உங்க லைக் எதுக்கு?

சென்னை: கோலிவுட்டின் இரண்டு முன்னனி நடிகர்களான தனுஷும், சிவகார்த்திகேயனும் தங்கள் படங்களின் ரிலீசை ஒரே நாளில் அறிவித்துள்ளனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில்  தனுஷ் மாசான டான் வேடத்தில் நடித்து  2015ம் ஆண்டு வெளிவந்த படம் “மாரி”. அனிருத் இசை அமைந்திருந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மாரி படத்தின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் மாரி-2வாக எடுக்கப்பட்டுள்ளது. இதில், தனுஷ் அதே டான் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார்.ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வூண்டர்பார் சார்பில் தனுஷ் தயாரிக்கிறார். யுவன் இசை அமைந்துள்ளார்.

இந்த படத்தின் படபிடிப்பு மற்றும் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டருடன் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படம் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதேபோன்று, சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கதில் உருவாகிவரும் படம் “கனா”. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில், சிவகார்த்திகேயன் ஒரு சில நிமிடங்கள் வரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும்  என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் அறிமுகமாகி சாதாரனமாக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயனை தனுஷ் 3 படத்தில் தன்னுடன் நடிக்க வைத்தது சிவகார்த்திகேயனுக்கு அவர் பெரிய ஸ்டாராக உதவியது. என்றாலும் தற்போது இருவரும் தனித்தனியாக தங்கள் ரசிகள் பட்டாளத்தை பெருக்கிகொண்டனர்.

இந்நிலையில், இரண்டு நடிகர்களும் தாங்கள் தயாரிக்கும் படத்தை ஒரே மாதத்தில் ரிலீஸ் செய்ய அறிவித்துள்ளனர். இதில் எந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கிறது என்று டிசம்பர் மாதம் தெரிந்துவிடும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news