தேவ் – விமர்சனம்

அட்வென்சர்ஸ் பிடித்த காதாநாயகன், பணம் புகழை விரும்பும் கதாநாயகி இருவருக்குள் ஏற்படும் காதல். இவர்களுக்குள் ஏற்படும் பிரிவு. இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.

அம்மா இல்லாததால் அப்பா பாசத்தில் வளர்ந்த பையன். பாசத்தை அனைவரிடமும் காட்டுபவன். அப்பா ஏமாற்றியதால் அம்மாவுக்கு ஏற்பட்ட கஷ்டம். அதனால் ஆண்களை வெறுக்கும் பெண். இந்த இருவருக்கும் ஏற்படும் காதல். இந்த கருவே ஒரு காதல் படத்திற்கு போதுமானது. ஆனால் அதற்கு உண்டான திரைக்கதை இல்லாதது வருத்தம் அளிக்கிறது

காதல் படங்களில் நாயகன் நாயகியின் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிகவும் முக்கியம் அந்த வகையில் கதாபாத்திரங்களின் தன்மை அழகாக உள்ளது. ஆனால் கதைக்கு தேவையில்லாத சீன்களும் டிவிஸ்ட்களும் படத்தின் திரைக்கதையை வலுவிழக்க வைத்திருக்கிறது.

காதலி பிரிந்த சோகத்தில் எவரெஸ்ட் செல்லும் காதலன். அவருக்கு அங்கு ஏற்படும் பாதிப்புகள். அனைத்தும் கதைக்கு அவசியம் இல்லாததால், அவர் அங்கு பிழைப்பாரா மாட்டாரா என்ற பதட்டம் ஆடியன்ஸிற்கு கொஞ்சம் கூட வரவில்லை. மாறாக சீக்கிரம் படத்தை முடியுங்கள் என்ற சத்தத்தை தான் கேட்க முடிந்தது.

நண்பர்களுடன் சேர்ந்து செல்லும் கலகலப்பான முதல் பாதி அருமை. ஆனால் இடைவெளியின் பொழுதுதான் கதை ஆரம்பம் ஆகிறது என்பதை உணரும் பொழுது அந்த கலகலப்பான காட்சிகளும் தேவையில்லை என்பது போல் தோன்றுகிறது.

இரு காதலர்களுக்குள் நடக்கும் பிரச்சனை, பிரிவு. அவர்கள் சேர வேண்டும் என்ற எண்ணம் இவை அனைத்தும் வலுவிழந்து காணப்படுகிறது. அதை கொஞ்சம் அழுத்தி கூறியிந்தால் சூர்யவிற்கு ஒரு வாரணம் ஆயிரம் போல் கார்த்திக்குக்கு இந்த படம் அமைந்திருக்கும்.

தேவ் கார்த்திக் தனக்கென்று ஒரு ஸ்டைல் அழகாகவும் அந்த கதாபாத்திரத்தில் நம்பும் படியாகவும் இருக்கிறார். காதலை சொல்லும் விதம், அவளுக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என அனைத்திலும் ஒரு நல்ல காதலனாகவே வாழ்ந்திருக்கிறார்.

மேக்னாவாகா வரும் ரகுல் ப்ரீத்தி சிங். பணக்கார திமிர், சுயநலவாதி கதாபாத்திரங்கள் அழகாக பொருந்தி இருக்கிறார். கார்த்தியை அலய விடுவது, தன்னுடைய காதலை வெளிபடுத்தும் இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார்.

நண்பனாக வரும் விக்னேஷ் காமெடியில் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார். தோழியாக வரும் அம்ருதாவிற்கு சரியான வாய்ப்பு அமையவில்லை.

படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு நல்ல தகப்பனாக அவரது பங்கை செய்திருக்கிறார். மேக்னாவின் அம்மாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் வருகிறார், போகிறார். மற்றபடி கதையில் இருக்கும் அனைவருமே அப்படித்தான் இருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜத் ரவிசங்கர் இயக்குனராக வெற்றி பெற்றுள்ளார். ஆனால் திரைக்கதை வடிவமைப்பாளராக இன்னும் கற்று கொள்ள வேண்டிய கட்டத்தில்தான் இருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் பணிகள் அற்புதம்.

இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ். நீண்ட நாட்களுக்கு பிறகு இசை. பாடல்கள் அனைத்தும் கேட்டதை போலவே இருக்கிறது, ஆனால் மனதை எதுவும் தொடவில்லை. எடிட்டர் ரூபன் இந்த படத்தின் நீளத்தை குறைக்க இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம்.

மொத்தத்தில் தேவ் காதலர் தினத்தன்று வந்து; சென்றான் என்ற பெயரை மட்டுமே பெற்றிருக்கிறது.

தேவ் : 2.5/5

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news