காஞ்சி பட்டு உடுத்தி திருமணம் செய்த நடிகை தீபிகா படுகோன் – வாழ்த்து கூறிய பிரபலங்கள்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக வளம் வரும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் நேற்று திருமணம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் தங்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இத்தாலியில் உள்ள லேக் கோமோ பகுதியில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொங்கனி முறைப்படியும், நேற்று சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் நடிகை தீபிகா, காஞ்சிபுரம் பட்டு புடைவை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் பயங்கர பாதுகாப்பான இடத்தில் திருமணம் நடந்ததால் ரன்வீர் சிங், தீபிகாவின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் அவர்களது திருமண புகைப்படங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளாக்கொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இருவருமே திருமணத்தன்று சபயசாச்சி டிசைனர் உடையும் அணிந்திருந்தனர்.

தீபிகா, ரன்வீர் சிங்கின் திருமண புகைப்படங்களை பார்த்த பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் அவர்களை வாழ்த்தியுள்ளனர். அந்த புகைப்படங்கள் மிகவும் அழகாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ரன்வீர், தீபிகாவுக்கு பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா, ப்ரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப், ஆலியா பட், நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news