நான் குடித்துவிட்டு கார் ஒட்டவில்லை. அவருடன் செல்பிதான் எடுத்தேன் – காயத்ரி ரகுராம்

நடிகையாக இருந்து பின்னர் நடன இயக்குனராக இருப்பவர் காயத்ரி ரகுராம் ஆகும். கடந்தவருடம் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பிரபலமானார். அதன் பிறகு அவரை பற்றிய பேச்சுக்கள் பெரிய அளவில் பேசவில்லை என்றாலும் அவரது வேலையை செய்து வந்தார். இன்னிலையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி அடையாறு போக்குவரத்து போலீசாரிடம் சிக்கியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது : இந்த போலி செய்தியை உருவாக்கியது குடித்துவிட்டு கார் ஓட்டி சிக்கிய நிருபர் தான். நான் படப்பிடிப்பு முடித்துவிட்டு என் சக கலைஞரை வீட்டில் விடச் சென்றேன். வழக்கமான பரிசோதனைக்காக என் காரை நிறுத்தினார்கள். நான் போலீசாருடன் மோதவில்லை. ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வேறு பையில் இருந்தது.

அதனால் அந்த ஆவணங்களை சரிபார்க்க போக்குவரத்து போலீசார் என்னுடன் வந்தார். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். சண்டை எதுவும் இல்லை. அவர் என் தந்தை பற்றி பேசினார், அவர் என் ரசிகர். அதனால் நாங்கள் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டோம். நான் காரை ஓட்டினேன். நான் குடிபோதையில் இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் என்னை காரை ஓட்ட விட்டிருக்கமாட்டார்கள் என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news