மீண்டும் இணையும் சல்மான் கான் – பிரபு தேவா! சந்தோஷத்தில் பாலிவுட்

சல்மான் கான் நடிக்கும் ‘தபாங் 3’ பிரபுதேவா இயக்குகிறார் என்ற வெளிவந்த தகவலை அடுத்து அதற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ‘தபாங்’ திரைப்படம் வெளியானது. இதன் இரண்டாம் பாகமான ‘தபாங் 2’ படத்தை அர்பாஸ் கான் இயக்கினார். இதைத் தொடர்ந்து, ‘தபாங் 3’ படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பிரபுதேவாவும் சல்மான் கானும் வெவ்வேறு படங்களில் ஒப்பந்தம் செய்து இருந்ததால் இந்தப் படம் ஆரம்பிக்க தாமதமானது.

‘தபாங் 3’ படத்தில் சல்மான் கான்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஸ்டார் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மத்தியப்பிரதேச மாநிலதில் உள்ள இந்தூரில் தொடங்கியுள்ளது. `வான்டட்’ என்ற படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தின் மூலம் இணைகிறது சல்மான் – பிரபுதேவா கூட்டணி. சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின் பொது இருவரும் இருக்கும் புகைப்படத்தைத் பதிவிட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு, சல்மான் கான் மற்றும் பிரபு தேவா ஒன்றுசேர்ந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news