Inandoutcinema - Tamil cinema news

திருமணத்திற்கு பிறகும் முதலிடத்தில் நீடிக்கும் டிடி. விவரம் உள்ளே

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் ஏராளம். சந்தானம் சிவகார்த்திகேயன் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். அப்படி வந்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின்பு சின்ன திரையில் தடம் பதித்து தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்தவர். இவரது பார்வை தற்போது வெள்ளித்திரை பக்கம் திரும்பியிருக்கிறது.

நடுவில் தொலைக்காட்சிகளில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்த டிடி இப்போது பிஸியாகிவிட்டார். ஆனால் டிடிக்கு ரசிகர்களிடம் இருக்கும் மவுசு குறையவே இல்லை. விருது விழா, படங்களின் ஆடியோ வெளியீடு போன்றவற்றில் அவர் பிஸியாக கமிட்டாகி வருகிறார். இந்த நேரத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்களால் விரும்பத்தக்க பிரபலம் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் டிடி. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டிடி. இந்த செய்தியை இணையத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முதல் 10 இடத்தில் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. திவ்யதர்ஷினி, கீர்த்தி, நக்ஷத்ரா, ரம்யா, வாணி போஜன், சைத்ரா ரெட்டி, ஆல்யா மானசா, சரண்யா, அஞ்சனா, நித்யா ராம் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news