September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

இங்கிலாந்து வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற குரோஷியா அணி. காணொளி உள்ளே

ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டயில், லீக், நாக்-அவுட், கால் இறுதி சுற்று மற்றும்அரையிறுதி என ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரையிறுதிப்போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி இதுவரை இறுதி போட்டிக்கு தகுதியே பெறாத குரோஷியா அணியை எதிர்கொண்டது.

இதில் ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் கிரெய்ன் டிரிப்யேர் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய குரோஷியா அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது. அதைத்தொடர்ந்து நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இரு அணியினராலும் கோல் போட முடியவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் குரேஷியா வீரர் மாரியோ 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனால் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்த குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 15ம் தேதி பிரான்ஸ் குரோஷியா அணிகள் இறுதி போட்டியில் மோதுகிறது. அதற்க்கு முன்னதாக மூன்றாவது இடத்திற்க்கான போட்டியில் இங்கிலாந்து – பெல்ஜியம் அணிகள் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news