Inandoutcinema - Tamil cinema news

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய அணி – அரை சதமடித்த தவான்

துபாய் மற்றும் அபுதாபியில் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறும். இலங்கை அணி 2 தோல்விகளை சந்தித்து இந்த தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

இந்த நிலையில் துபாயில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

இந்திய அணி நிதானமாக ஆடியது. 8 வது ஓவரில் இந்த இணை பிரிந்தது. ஈஷன் கான் பந்து வீச்சில் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார் தவான்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டிருக்கும் அனுப்பியவாரு இருந்தனர். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் அரைசதத்தை கடந்தார். 22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 65 ரன்களிலும் ராயுடு 36 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news