விக்ரம் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!!?

பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான். லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார், அதன்பிறகு நட்சத்திர வீரர் ஆனார். இப்போது சினிமா நடிகராகவும் ஆகிறார். அதுவும் தமிழில்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கிறார். அவருடன் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இதனை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்த படம் பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற கலைஞர்களின் விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news