கொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…

தெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் இவர் ஆபாச நடிகை மியா மல்கோவாவை வைத்து ‘கிளைமேக்ஸ்’ எனும் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்  டிரைலர் மற்றும் பாடல்கள் கடந்த வாரம் வெளியானது.

பலரும், இந்த கிளைமேக்ஸ் திரைப்படத்தினை ஆர்வமாக எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தான் ‘கொரோனா வைரஸ்’ என்ற பெயரில் முழு நீள படத்தினை இயக்கியுள்ளதாகவும், அப்படம் முழுவதும் இந்த லாக்டவுனுக்கு இடையில் எடுக்கப்பட்டதாவும் கூறினார் ராம் கோபால் வர்மா.

மேலும் இப்படம் உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக இருக்கும் என்ற அவர், இப்படத்தின் டிரைலரை இன்று மாலை வெளியிட்டார். இப்படத்தின் திகிலான டிரைலர் செம வைரலாகி வருகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news