டிவிட்டரில் விஷாலை சாடிய எஸ்.வி.சேகர்

Vishal Vs S.Ve.Sekar

தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்க பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் ரூ.1கோடி வைப்பு நிதியை கையாடல் செய்துவிட்டதாக கூறி நடிகர் எஸ்.வி.சேகர், ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன் உள்பட நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கடந்த இரண்டு தினங்களுன்னு முன்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு சென்ற நடிகர் விஷாலை போலிசார் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் விஷாலை டிவிட்டரில் சாடியுள்ளார்.

அதில் அவர், “நல்லது செய்வது முறைகேடு என்றால் அதை தொடர்ந்து செய்வேன்” -விஷால். சரியா சொல்லுங்க அப்பிடியா இல்லை இப்படியா. “ முறைகேடு செய்வது நல்லது என்றால் அதை தொடர்ந்து செய்வேன்”. என்று கேட்டுள்ளார்.

முன்னதாக விஷாலை போலீசார் கைது செய்து விடுவிக்கப்பட்ட பின்னர் பின்னர் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில்

‘செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறேன். இது வேடிக்கையாக இருக்கிறது. என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது. சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறவன் நான். நல்லது செய்வதை யார் தடுத்தாலும், அந்த தடையையும் மீறி நல்லது செய்வேன் என்று கூறியிருந்தார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news