மாரடைப்பால் காலமான நடிகர்-திரையுலகினர் அஞ்சலி…

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தொடக்கத்தில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். பின்னர் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்களை ஏற்று நடித்தார்.

தவசி, ஐயா, வேலு, எல்லாம் அவன் செயல் ஆகிய படங்களில் அவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம்.

55 வயதான கிருஷ்ணமூர்த்தி, 7ஆம் தேதி அன்று குமுளி அருகே வண்டிப்பெரியாறில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவரை மீட்ட படக்குழுவினர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டு, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ், சித்ரா லட்சுமணன், இளவரசு ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news