Inandoutcinema - Tamil cinema news

கோலமாவு கோகிலா படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் நெல்சன்

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னிலையில் இந்த படத்தை பற்றி இயக்குனர் நெல்சன் கூறியதாவது : இது, கடத்தல் தொழிலை பற்றிய கதை.

இந்த படத்தில், ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நயன்தாரா வருகிறார். அம்மா, அப்பா, தங்கை என்று ஒரு குடும்பத்தை தாங்கி பிடிக்கும் பெண்ணாக நடிக்கிறார். அவருடைய அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி, தங்கையாக ஜாக்குலின் ஆகியோர் வருகிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில், சரவணன் நடிக்கிறார். படத்தில், நயன்தாராவுக்கு ஜோடி இல்லை.

அவரை ஒருதலையாக காதலிப்பவராக யோகி பாபு நடித்து வருகிறார். கதையை கேட்டதுமே நயன்தாரா நடிக்க சம்மதித்தார் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் உள்ள கல்யாண வயசு பாடல் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news