Inandoutcinema - Tamil cinema news

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது – காவிரி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ள கருணாநிதியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய, மாநில இன்னால், முன்னாள் அமைச்சர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு சற்று நேரத்திற்கு முன்பு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், சிவி.சண்முகம் உள்ளிட்டோரும் சென்றனர்.

பின்னர் அவர்கள் வெளியில் வந்து நிருபர்களிடம் கூறுகையில்: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். நானும் துணை முதல்வரும் பன்னீர் செல்வமும் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் அவரை நேரில் பார்த்தோம். மருத்துவர்கள் தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலையை கண்கானித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி  உடல்நிலை நேற்று இரவு திடீரென மோசம்டைந்தது. இந்த தகவல் அறிந்து காவேரி மருத்துவமனை முன்பு காத்திருந்த திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆயிரக்கணக்கானோர் கூடினர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பின்னர், அதிகாலை 3 மணிக்கு மேல் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி விரைவில் சிகிச்சை முடிந்து வெளியில் வரவேண்டும் என்று திமுக தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news