ஆண்டனி படத்தை கிளாஸ்ட்ரோஃபோபியா ஜானராக எடுத்துள்ளார் இயக்குனர் குட்டி குமார். இந்த படத்தில் புதுமுகங்கள் நிஷாந்த், வைஷாலி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். படத்துக்கு 19 வயது பெண் சிவாத்மிகா இசை அமைத்துள்ளார்.
சிவாத்மிகா இசையை கேட்ட, நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெகுவாக பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளராக ஆர்.பாலாஜி பணியாற்றுகிறார். இந்த படத்தின் பட தொகுப்பு வேலைகளையும் இயக்குனரே பார்த்துவிட்டார்.
ஜூன் 1 இப்படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு நிமிட காட்சி முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியை தற்போது வரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.