பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் – நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் சாமி 2 ஆகும். இயக்குனர் ஹரி எழுதி இயக்கிய இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் என்பவரால் தமீன்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபு, பாபி சிம்ஹா மற்றும் சூரி ஆகியோருடன் பெண் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தினுடைய ஒரு தொடர்ச்சியாகும். இந்த படத்தின் முதல் தோற்றம் மோஷன் போஸ்டர் மே மாதம் 17ம் தேதி 2018 இல் வெளியானது. சாமி 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரம் இந்த படத்தில் அதிரடியான காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார். வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் நடித்துள்ள மூன்றாவது கண் என்ற குறும்படம் சென்னையில் வெளியிடப்பட்டது. குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கூறியதாவது :

சிங்கப்பூரைபோல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம் என நடிகர் விக்ரம் கூறியுள்ளார். நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தாலும் இது போன்று சமூக அக்கரை உள்ள செயல்களில் ஈடுபடுவதால் திரைபிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news