September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என கார்த்தியை புகழ்ந்த நடிகர் சூர்யா. விவரம் உள்ளே

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். இதில் சத்தியராஜ், சயீஷா சைகள், பிரியா பவானி சங்கர் பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி, அர்த்தனா பினு உட்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை 2டி என்டேர்டைன்மெட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் விமர்சையாக நடந்தது. இதில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது விழா மேடையில் நடிகர் சூர்யா பேசியதாவது : தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பழமொழி உண்டு. கார்த்தியை நான் அப்படித்தான் பார்க்கிறேன். தம்பி கார்த்தியின் வளர்ச்சியும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் பக்குவமும் எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் என்னை ஆச்சரியப்படுத்தின. வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் எல்லோருக்கும் வரலாம். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. விவசாயிகளின் சிறப்பையும் பேசுகிறது. இந்த படத்தை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என நடிகர் சூர்யா பேசினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news