September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

விவசாயியாக நடித்தது பற்றி நடிகர் கார்த்தியின் கருத்து. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்கத்தில் 2டி என்டேர்டைன்மெட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் விமர்சையாக நடந்தது. இதில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் கார்த்தி கூறியதாவது : விவசாயிகளை பெருமைப்படுத்தும் படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும்.

இந்த படத்தில் நான் விவசாயியாக நடித்து இருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. அதோடு உறவுகளின் முக்கியத்துவத்தையும் படத்தில் காட்சிபடுத்தி உள்ளோம். குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படமாக தயாராகி உள்ளது என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news