தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாடகி சின்மயி முக்கிய கோரிக்கை

சென்னை: தமிழ் திரையுலகில் புயலை கிளப்பில் உள்ள சின்மையின் பாலியல் புகார்கள் இதுவரை முடிந்த பாடில்லை. கவிஞர் வைரமுத்து, நடன இயக்குனர் கல்யாண், நடிகர்  ஜான் விஜய் மற்றும் பல கர்நாடக இசை கலைஞர்கள் என்று இந்த பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சின்மயின் துணிச்சலான செயலை பாராட்டி சமந்தா, சித்தார்த், அத்தி ராய் என சக நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் ஆகியவற்றுக்கு பாடகி சின்மயி முக்கிய கோரிக்கை விடுத்துள்ளாார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெண்களோ அல்லது ஆண்களோ தாங்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவது, மிரட்டப்படுவது அல்லது பாலியல் அத்துமீரல்கள் எதிர்கொள்வது பற்றி புகார் அளிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் ஆகியவை இதுகுறித்து உடனடியாக ஒரு குறைகேட்பு கூழு அமைக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

திரையுகல பிரபலங்கள் மீதான பாடகர் சின்மயின் பாலியல் புகார்களுக்கு தயாரிப்பாளர், நடிகர் சங்கம் நிர்வாகிகள் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கைகளுக்கு அவர்கள் தரப்பில் இருந்து பதில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news