இரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா, இரண்டாவது சதத்தை பதிவு செய்த ரிஷப் பந்த் – வலுவான நிலையில் இந்திய அணி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் 2ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். நாலாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், உணவு இடைவேளை வரை இந்தியா 117 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா இரட்டை சதம் பூர்த்தி செய்வார் என எதிர்பார்த்த நிலையில் 193 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். இந்திய அணி தேநீர் இடைவேளையில் 146 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின் ஆட்டம் தொடர்ந்தது. விஹாரி (42) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு இளம் வீரர் பந்த் மற்றும் ஜடேஜா இருவரும் நேர்த்தியாக ஆஸ்திரேலிய பந்து வீச்சை அடித்து ஆடினார்கள். தனது இரண்டாவது சதத்தை பௌன்டரி அடித்து நிறைவு செய்தார். கடைசியாக ஜடேஜா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் வீரர் பன்ட் 159 எடுத்து கடைசிவரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் உள்ளார்.

7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை இந்திய அணி டிக்ளேர் செய்தது. பிறகு தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தது. 2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 19 ரன்களுடனும் உஸ்மான் கவாஜா 5 களத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news