“ஆண் தேவதை” படத்துக்கு தடை – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி – ரம்யா பாண்டிய நடித்துள்ள படம் “ஆண் தேவதை”. சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ளநர். இப்படம் இன்று (அக்.10ம் தேதி) ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில், படத்தை ரிலீசுக்கு சென்னை உரிமையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது குறித்து சென்னை 13வது உரிமையில் உதவி நீதிமன்றத்தில் நிஜாம் மொஹைதீன் தாகல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள “ஆண் தேவதை” படத்தின் தயாரிப்பு செலவுக்காக கடந்த 2016ம் ஆண்டு அதன் தயாரிப்பாளர் அகமது பக்ரூதின் என்னிடம் ரூ.37 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த தொகையில் ரூ.15 லட்சத்தை திரும்பி செலுத்திய அவர். மீதி பணம் ரூ.22 லட்சத்தை படம் ரிலீசுக்கு முன்பு திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், கூறிய படி அவர் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. எனவே “ஆண் தேவதை” படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு “ஆண் தேவதை” படத்தை ரிலீஸ் செய்ய தடை விடித்தனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news