படம் முடித்துவிட்டேன், டிசம்பரில் முறையாக அறிவிப்பேன்! – இயக்குனர் சேரன்

இயக்குனர் சேரன் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் யாருக்கும் சொல்லி தெரியவேண்டிய தேவை இருக்காது. 1997ம் ஆண்டு பாரதி கண்ணமா தொடங்கி, பொற்காலம் (1997),  வெற்றிக்கொடிகட்டு (2000), பாண்டவர் பூமி (2001), ஆட்டோ கிராப் (2004), தவமாய் தவமிருந்து (2005) என இவரின் படைப்புகள் ஒவ்வொறும் ரத்தினக்கள்.

2000 தொடக்கத்தில் இயக்குனர்கள் நடிகர்களாக மாறிகொண்டிருந்த காலத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கின் சொல்ல மறந்த கதை (2002) படம் மூலம் நடிகர் ஆனா. அதன் பிறகு அவர் இயக்கி நடித்த படம் தான் ‘ஆட்டோ கிராப்’ இந்த படத்தின் ஒன்லைனை வைத்து இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்க கூடும். அதேபோன்று தந்தை மகன் பாசத்தை அப்போதே பேசிய படம் தவமாய் தவமிருந்து.

அதன்பிறகு இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் கவணம் செலுத்திய சேரனுக்கு படவாய்ப்புகள் குறைந்தது. கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு வெளியான் ‘யுத்தம் செய்’ படத்துக்கு பிறகு சேரன் சினிமாவில் இருந்து சோபிக்கவில்ல. தொடர்ந்து இயக்குனர் சங்கப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவ்வபோது ஒரு சில படங்களில் தலை காட்டிவிட்டு சென்றார்.

இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு சேரன் தற்போது புதிய படம் இயக்கி வந்தார். தற்போது அதுபற்றிய தகவலை டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். அதில், ‘எனது படைப்புகள் ஏன் வரவில்லை என்ற விசாரிப்புகள் நாளுக்குநாள் டுவிட்டரில் அதிகமாவது எனக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுக்கிறது.. நல்ல படைப்புகளைத்தேடும் அனைவருக்கும் நன்றி… ஒரு திரைப்படம் இயக்கி முடித்துவிட்டேன்.. வரும் டிச 12ல் முறையாக தெரிவிப்பேன்….’ என்று அவர் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news