Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் புகைப்படம்

தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 மற்றும் செக்க சிவந்த வானம் படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் தனது நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல் புகைப்படம் சற்று முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

அந்த புகைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், காயத்ரி ஷங்கர், ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news