விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை – இஸ்ரோ

சந்திராயன் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி கடந்த 7ஆம் தேதி அதிகாலை  நடைபெற்றது. நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், நிலவின் பரப்பில் உடைந்து விடாமல் முழுமையாக லேண்டர் இருப்பதாகவும், அதேநேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இஸ்ட்ராக் (ISTRAC) எனப்படும் இஸ்ரோவின் தொழில்நுட்பக் குழுவினர், லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முழுவீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை, நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் கண்டறிந்துவிட்டாலும், இதுவரை தகவல் தொடர்பு கிடைக்கவில்லை என்று இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news