September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளதாவது: “ஒடிசாவை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

தமிழகத்தில் மழைக்காலம் நெருங்கும் நிலையில் மழைக்கு முன்னேச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும், மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும், சாலைகளில் தண்ணீர் தேங்காதவாரு  பள்ளங்களை அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news