சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்! – முழுசா நனஞ்ச அப்பறம் முக்காடு போட்ட தணிக்கை குழு..

சென்னை: சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குறிய காட்சிகளை தணிக்கை குழிவினர் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், சர்கார் படத்தில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்றும், அந்த திட்டமே தவறு என்பது போன்றும் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மேலும்,  படத்தில் நடித்துள்ள வில்லி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி என்று இருப்பதாகவும் அது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர். அவரது பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்காகவே வில்லி கதாபாத்திரத்திற்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக அரசால் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து படத்தில் உள்ள சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் உள்பட தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். நேற்று மாலை இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் சர்கார் படம் ஓடும் தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள், கட்-அவுட்களை அகற்றி எரிந்தனர்.

அரசின் இந்த போக்கிற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் ரஜினி, கமல் ஹாசன், விஷல், வைகோ, திருமாவளவன் உள்பட பலர் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர். இருப்பினும் காட்சிகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் அடம்பிடித்தனர். இதையடுத்து, சர்கார் படம் தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பப்படும் என்று சென்னை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தணிக்கை குழுவினர் படத்தில் இடம் பெற்றிருந்த அந்த காட்சிகளை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊர்ல சாலை பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் போன்ற அதியாவசிய பொருட்களின் உயர்வு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை, 20 தொகுதிகளில் எம்.எல்.ஏக்கள் இல்லை என்று பல பிரச்னைகள் இருக்கும் நேரத்தில், ஒரு படத்தில் வந்த சில காட்சிகளுக்கு முதல் ஆளாக வந்து போர் கொடி தூக்கி வெற்றி பெற்ற அ.தி.மு.க அரசை மக்கள் அனைவரும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news