த ஒன் அண்ட் ஒன்லி ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 68வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் அவருக்கு பிரபலங்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் ரஜினியுடன் பழைய படங்களில் பணியாற்றிய போட்டோக்களை இணைத்து ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி, சக நண்பன், எப்போதும் பரபரப்பானவர் என்று தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், “என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்”. என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் முக.ஸ்டாலின், “திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ” மனிதநேயர், பண்பாளர், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் திரு அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். மேலும் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க. என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன் என என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ரஜினிக்கு பிறந்தநாள் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் ரஜினியுடன் ரொமவே வித்யாசமாக எடுத்துகொண்ட ஒரு புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, பல தலைமுறைகளுக்கு உத்வேகமாக உள்ள ரஜினிகாந்த் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் பூரண ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன் என்று தெரித்துள்ளார்.

இயக்குனர் சங்கர், 2.0 படத்தின் வாழ்த்து போஸ்டருடன் ரஜினிக்கு அவரது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “உங்கள் பெயரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கைத்தட்டும்…இந்த உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு தலைமுட்டும்” (என்று இந்திரன் பட பாடல் வரிகளை குறிப்பிட்டு) உங்களின் ரசிகனாக இருப்பதில் எப்போதும் பெருமை கொள்கிறோம், நம் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நடிகர்கள் தனுஷ், பாபி சிம்ஹா, விக்ரம் பிரபு, சாந்தனு,  நடிகைகள் திரிஷா, ஹனிகா மொத்வானி, நீத்து சந்திரா, இந்துஜா, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், அறிவழகன்  உள்பட பலர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news