சி. வி. குமார்

சி. வி. குமார்

Birthday
14 ஏப்ரல் 1979
Overview
தொழில் கோலிவுட்
தொழில் தயாரிப்பாளர், இயக்குனர்
முதல் படம் அட்டகத்தி
விருதுகள் பிலிம் பார் அவார்ட், விஜய் அவார்ட்
Biography

சி. வி. குமார் (எ) சி. விஜயகுமார் எனபவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரரும் ஆவார். இவரது திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் நிறுவனத்தின் கீழ் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றித் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பிறந்த சி. வி. குமார் (பி. ஏப்ரல் 14, 1979; இயற்பெயர்: சி. விஜயகுமார்), பள்ளிப் படிப்பை, மதுரை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டயமும், இயங்குபடம், ஒலி வடிவமைப்பு மற்றும் படத்திற்கு கதை எழுதுவது எப்படி என மதுரை அரினா அனிமேஷன் மூலம் பயின்றவர். இவரது தந்தை, சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததால், இந்தியாவின் எல்லா சுற்றுலா தளங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு 2010ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ் சென்ற போது அங்கிருக்கும் திரைப்படங்கள், தயாரிப்பு நிறுவன நுனுக்கங்களைக் கண்டு, தானும் அது போன்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, படங்கள் தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்து, திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை 2010ம் ஆண்டு தொடங்கினார். மேலும், நவீன் சந்திரா நாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் மாயவன் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார்.

Filmography

அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி

Upcoming Movies

Photos

Awards

பிலிம் பார் அவார்ட், விஜய் அவார்ட்